ஸ்மார்ட்போனை திருமணம் செய்தவர்(படங்கள்)

ஸ்மார்ட்போனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர்
லாஸ் வேகஸ் நகரத்தை சேர்ந்தவர் கலைஞர் மற்றும் இயக்குனரான ஆரோன் சேர்வேனக், சமீபத்தில் லாஸ் வேகஸ் நகரத்தில் தனது ஸ்மார்ட்போனை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தேவாலயத்தில் நடந்த திருமண நிகழ்சியில் பாதிரியார் ஒருவர் திருமணத்தை நடத்திவைத்தார்.

கிறிஸ்த்துவ வழக்கப்படி பாதிரியார் ஆரோனிடம் “ இந்த ஸ்மார்ட்போனை சட்டப்படி உங்கள் மனைவியாக ஏற்றுகொள்கிறீர்களா? நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நேசிப்பீர்கள் என்றும், மரியாதை அளிப்பீர்கள் என்றும், ஆறுதலாக இருப்பீர்கள் என்றும் சத்தியம் செய்ய தயாரா? என்று கேட்டார். இதற்கு ஆரோன் ’ஆமாம்’ என்று பதில் அளித்தார்.

பிறகு இந்த திருமணம் பற்றி பேசிய அவர் “ மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனை அதிகமாக நேசிக்கிறார்கள். காலை கண் விழிப்பதில் ஆரம்பித்து இரவு தூங்க செல்வது வரை ஸ்மார்ட்போன் கூடவே இருக்கிறது.

என் ஸ்மார்ட்போனுடன் எனக்கு நீண்ட நாள் உறவு உள்ளது. நமது போனுடன் உணர்ச்சிகரமான உறவை கொண்டுள்ளோம். நமக்கு ஆறுதலும், அமைதியும் அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உள்ளது. இது கிட்டதட்ட ஒரு மனித உறவு போன்றதுதான்” என்று கூறியுள்ளார். இந்த திருமணம் சட்டப்படி அங்கிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.FB_IMG_1467325517399FB_IMG_1467325512294FB_IMG_1467325506143

42417 Total Views 45 Views Today
Share with Your friends

About The Author

Related posts