பரவிப்பாஞ்சான் மக்கள் இரண்டாவது நாளாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில்

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள தமது காணிகளை விட்டு இராணுவம் வெளியேறி, மீள்குடியேறுவதற்கு காணிகளை கையளிக்க கோரி அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்த தொடர் போராட்டம் இரவு பகலாக பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. இப்போராட்டத்தில், பெண்கள், சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள் எனப் பலரும் பங்கெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தமது காணிகளை விடுவிக்கும் வரை தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த காணியில் ஒரு பகுதி விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனால், இன்று எமது காணியை மறைத்து அடைத்து வருகின்றனர். எமது காணியை விடுவிக்கப்படும் வரை நாம் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

20160814_181910 20160814_181803

177 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts

1 Comment

  1. Foot Pain

    Excellent post. I was checking continuously this blog and I’m impressed!
    Very useful info specifically the last part 🙂 I care for such information a lot.
    I was looking for this certain info for a very long time. Thank
    you and best of luck.

Leave a Reply

Your email address will not be published.