வவுனியா மாவட்ட செயலகத்தில் பதட்டம்

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து இன்று ( 20.08.2016) பிற்பகல் 3.40மணியளவில் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிட நிர்மாணப்பணியின் போது கட்டிட நிர்மானப்பணியாளர்களினால் குண்டு ஒன்றை மீட்டனர். இச் சம்பவத்தை உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுமிச்,அஸ்வின் ஆகிய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார்  நிர்மாணப்பணியாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் குண்டை மீட்டதுடன். இக் குண்டு பல வருடம் பழைமை வாய்ந்தது என தெரிவித்தனர்.

194 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published.