கைது செய்தவரை கொலை செய்தது போலீஸா கொடிகாமத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் ஏரி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிராதான சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2091 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts

2 Comments

  1. Marshall Seu

    I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade website post from you in the upcoming also. Actually your creative writing abilities has encouraged me to get my own web site now. Actually the blogging is spreading its wings fast. Your write up is a good example of it.

Leave a Reply

Your email address will not be published.