அதிகரிக்கும் காணி அபகரிப்புகளும் கிளிநொச்சியும்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள பகுதிகளில் காணி பிணக்குகள் அதிகளவிலே காணப்படுகின்றன.

அதாவது அரச தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை அத்துமீறி அபகரித்தல் கிளிநொச்சி குளத்தினை அண்டிய பகுதி நீர்ப்பாசன வாய்க்கால்கள் கழிவு வாய்க்கால்கள் என்பவற்றை அத்துமீறி அபகரித்தல் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகள் கடந்தகாலங்களில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

இதனைவிட ஏராளமான தனியார்காணிகள் தொடர்பில் அதிகளவான பிணக்குகள் காணப்படுகின்றன.

அதாவது ஒரு காணிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உரிமை கோருதல் குடும்பங்களிடையே காணிப்பகிரப்படுத்தலில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் என கிளிநொச்சி கரைச்சிப்பிரதே செயலர் பிரிவினால் அதிகளவான காணிப்பிணக்குகள் காணப்படுகின்றன.

இவ்வாறான காணிப்பிணக்குகள் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகத்திற்கு வருமை தருவது அதிகளவில் காணப்படுகின்றன என்றும் இதனால் அதிக வேலைப்பழு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ்நிலையங்களில் அதிகளவான காணிப்பிணக்குகள் தொடர்பான வழக்குகளே பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தககது.

312 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published.