தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலஜெஸ்ஸி – அருளானந்

இனிப்பாய் இனிக்கிற
இந்த இனிமை குளிரை எழதுவதே அலாதி தான்.
மழை வாசம் நிரம்பிய உடலோடும்
இந்த தேநீரோடும்
நீயாகிய நானும் கரைவது தான் காதலோ பக்கீ..
அன்பென்ற மழையிலே நனையாமல் போகிற மனிதனல்ல நான்.
நான் என்றும் குடை தான்.

உன் விரலை பற்றிக்கொண்டிருக்கும்
இந்த கொண்டாட்டத்தை என்னால் சுவாசிக்க முடியவில்லை.
நீண்ட பெருமூச்சு தேவை எனக்கு.
மூச்சுவிடுவோமா?ம
ுத்தமிடுவோமா?
சீ போடா?..
இத்தனை அழகாய் இருந்திருக்க வேண்டாம்
நீ இருக்கிற நாட்கள்.

நெருங்காதே அடைமழையே!
உன் உதட்டு இசை என்னைத் திணறடிக்கிறது.
நான் கொஞ்சம் முத்தமிட  வேண்டும்
கன்னத்தில் முத்தமிடமுடியுமா??

எப்படி எழுதுவேன்?
இசையின் சுகம்.
தீராத காதலின் மகிழ்வு
காதல் நினைவுகளின் கொண்டாட்டம்
இப்போது தான் புரிகிறது சந்தோஷம்,இன்பம்,மகிழ்ச்சி ,கொண்டாட்டம், போன்றவற்றால் வாழ்வை மிதக்கவிடவேண்டும் யாருமே!

நாம்  நான்குப் பேரை காதலித்தோம்,கட்டியனைத்து  புணர்ந்தோம் என்பதா சந்தோஷம்?
தூ கேவலம் ஜெஸ்ஸி.
அத போய் லவ்னு சொல்றாங்க தசை ஆசை புடிச்சவங்க.

என்னால்  உன் மீது பைத்தியமாய் இருப்பது தான் என் சந்தோஷம்.
உன் மீது பைத்தியமாய் இருக்க முடிவது  எனக்கென்னவோ வரம் போல இருக்கிறது..
அதற்காகவ உன் ஐந்து விரல்களுக்கும் உன்னை போல ஐந்து பெண் குழந்தைகள் பெற்று தரவேண்டும் மூச்சில் நிறைந்தவளே.

வாழ்விலே  செமயான விஷயம் என்ன தெரியுமா?
காதலுடன் உடன் இருக்க முடிவதும்,
அந்த காதலலினைஎப்போதுமே தொலைக்காமல் வைத்துக் கொள்வதும் தான்.
அதே மாதிரி இன்னொரு செமயான விஷயம் ‘விழிப்புணர்வுடன் இருத்தல்.
ஒரே செக்கனில்  இவை இரண்டும் நிகழும் தருணத்திற்கு    காதலென நான் சொல்வது தப்பா? ஜெஸ்ஸி?காதலின் கூச்சலை
,கிறக்கத்தை,இசையை,உன்னிடம் தான் உணர்கிறேன்  டா என நீ அப்போது சொன்னது ஞாபகம் வருதே தமிழே,

மழை நேரத்து தேநீரை போல்,விண்ணைத்தாண்டி வருவாயாவை போல், எ
ன் கவிதையை போல், த
ென்றல் வந்து தீண்டுவதை போல் உன்னை நினைப்பது  அலாதி மா.( ரொம்பவும் சிரிக்காத டி)

உன்னுடன் இருந்ததை விட உன் நினைவில் இந்த தேநீரை பருகி கொண்டிருப்பதே இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. இதைப் படிக்கும் வரம் கிடைத்தால் நீ சிரிப்பாயா சிணுங்குவாயா?இல்ல இவன் ஒரு லூசுனு நினைப்பியா?

உன்னை நினைப்பது இருக்கிறதே!

அது இந்த இடைவெளியை போல தான் எனக்கு .
நினைத்தல், பார்த்தல், உன்னுடன் இருத்தல் ,மகிழ்தல் ,இரசித்தல் ன்பது அடடா ஒன்றும் சொல்லமுடியாது.
பிறகு உன்னை நினைத்துக்கொண்டே உறங்குதல்
என்பது தீராத தேன்சுவை. (அட லூசு பக்கீனு சிரிப்பியே )

நீ மறுபிறவியில் என் போல ஆண்பிள்ளையாக பிறந்து  என் ஜெஸ்ஸியை போன்ற ஒரு காதலியைச் சந்தித்தால்  உணரக் கூடும்
கொண்டாட்டமான உணர்வை எப்படியாவது எழுதிவிடத் துடிக்கும் என்  விரல் படும் படபடப்பை.
(ஐயோ சாமி நான் தான் எழதுறேனா இப்படியெல்லாம்)
என் இதயம் உணர்வதற்கு
என்ன பேர் என்றுத் தெரியவில்லை ஆனால் இன்பராகம் தெளிக்கும் தேவதை டி நீ.

இன்பமானவற்றை எழதுவதென்பதொரு ஒரு குளிர்காய்தல்,
அந்த குளிர்காய்தலோடு எழதிக்கொண்டிருக்கிறேன்.
சொல்ல முடியாத வார்த்தைகளை எழதுகிறேன
சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் எல்லாம் என் தொண்டைக்கடியில் சிக்கிவிட்டதோ!
அதைச் சொல்லிவிட முடியாத மெளனமாக  சிக்கிச் சாகும் என்னை எப்படியாவது எழதவை.
அது உன் கரங்களை பற்றிக்கொண்டால் தான் எழதவேனும் முடியும்.

இதெற்கெல்லாம்  ஒரு கூம்பிடு சாமி!  உன் காதலால் தான் இப்படி பைத்தியமாக இருக்கிறேன்னு சொல்லி குளிர்மழை பொழியாத
சித்தம் கலங்கிபோயிருக்கேன்.
பைத்தியமாய் இருப்பதால் தான் உன்னைக் காதலித்துக் கொண்டே இருக்கிறேன் நானும் உன்னனு நீ சொல்லி அழதது ஞாபகம் வருது ..

உலகத்திலே பூக்களால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆண்மகன் நான் தான் ஜெஸ்ஸி..(அப்போ நான் இல்லையா நீயும் தான் Always for You jessie)

என் அலாரச்சேவல் கூட சொல்லும் .உன் மீது நான் என்ன மாதிரிப் பைத்தியமாய் இருக்கிறேன் என்று.
எனக்கு எவ்வளவு பெரிய கவிதை  நீ எனக்கு அந்த கவிதைகளை விட உன் நினைவில் குளிர்காய்வது  அழகு தான்.

என்னால் எழதவே முடியவில்லை
என் தமிழறிவு எழத்தறிவெல்லாம் சுமாராக இருப்பதால் உன்னையும் காதலையும், சந்தோஷத்தையும் என் தாய்மொழிக் கொண்டு எல்லாம் எழுதிடமுடியும்.
உன் கர்த்தர் உன்னோடு இருப்பது போல.

எவ்வளவு முத்தமிட்டாலும்,எழுதினாலும் சலிக்காத பாடலாக நீ ஏன் இருக்கிறாய்.

உன்னை முத்தமிட்டுக்கொண்டே மூச்சடைத்து சாகவேண்டும். அப்படி முழிச்சு  முழிச்சு பார்த்துத் தீர்க்கவேண்டாம் பிறகு இனி மெல்ல மெல்ல இதழ் நனையும் என்று சொன்ன வார்த்தைகள் வந்துபோகுமே இப்போது.

உன் முத்தத்துக்கும் என் முத்தத்துக்குமான இடைவெளியில் மிதக்கும் மூச்சுக்காற்றின் இசையை என் வாழ்க்கை முழுவதுமே கேட்கும் வரத்தை காதல்கடவுள் தருவாரா?

எழுதமுடியாத ஒன்றை இதோ கொண்டாடிய படி எழதிக்கொண்டிருக்கிறேன் உன் வியர்வை வாசம் பரவியிருக்கும் என் அறையிலிருந்து.

ஆங்கில மொழிப் போல அல்லாமல், எப்போதும் எனக்கு கைகொடுக்கும் மொழியாக இருப்பது  தாய்மொழி தான்.    நல்ல எழுத்தாற்றல்  இருந்தால் இளைய ராஜா இசையால் கிறங்கவைப்பதை போல் உன்னை சிலிர்க்க வைத்திருப்பேன்.
கொஞ்சம் எரிச்சலோடு தான் வாசித்தாக வேண்டும் ஒரு குழந்தையின் எழத்தை.அதுவும் எழத்தாற்றல் இல்லாமல் புலம்பித் தள்ளுகிறவனின் எழத்தை.

எழுதவேண்டும் போல தோன்றினால் முதலில் வருவது உன் அழகும், காதலும்,மெளனமும்,உதடும்  தான் வருகிறது.
இப்போதைக்கு இதுவே போதும் என சந்தோஷப்பட்டுக்கொள்வது போல் உலகமும் சந்தோஷத்தால் வளமடையட்டும் நம்மை போல.

நம் காதலை  எழுதுவதென்பது சாதாரண வேலையாகாது தான் எழுதி எழதி உருகி உருகி நான் சிக்கி சிதறுகிற ஒரு மகிழ்வான நினைவை தந்தமைக்கு நன்றி வெண்ணிலாவே.

உன் காலருகில் எறும்பாக இருக்கிற
என்னை திட்டிக்கொண்டே
முத்தமிடும் தருணமெல்லாம்
இனி என் நாட்காட்டியில் இல்லாமல் போனாலும் என் ஜன்னலோரம் அதன் நினைவுகளை சுமந்து தேநீர் பருகும் ஜெஸ்ஸி என எழத்துக்களால் என்னால் எழதும் போதே விரல்கள் நடுங்குகிறதே நீயில்லாத பொழதுகளை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.
இதுதான் காதலா?

அருளானந்(fb Arul ananth)

542 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts

2 Comments

  1. Keila Parfitt

    Nice post. I used to be checking constantly this blog and I’m impressed! Extremely useful info particularly the ultimate phase 🙂 I take care of such info a lot. I was seeking this particular info for a very long time. Thanks and good luck.

Leave a Reply

Your email address will not be published.