தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட இதுவே காரணம்!

போராட்டங்கள் அமைதி வழியில் தீர்க்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் தமிழக பொலிஸாரால் வன்முறை பிரயோகிக்கப்பட்டு அடக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நிரந்தரச் சட்டமோ, தற்காலிகச் சட்டமோ இயற்றப்படும் வரை ஜல்லிக் கட்டுத் தடைக்கெதிரான போராட்டத்தை ஒத்தி வைக்க எங்களுக்குக் கால அவகாசம் வழங்குங்கள் எனத் தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அங்கிருந்து வரும் செய்திகளின் படி போராட்டங்களுக்குள் ஒரு சில விஷமிகள் புகுந்து கலவரம் செய்த காரணத்தால் தான் பொலிஸார் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆனால், தமிழக பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது வன்முறை பிரயோகித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என சிவாஜிலிங்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2574 Total Views 3 Views Today
Share with Your friends

About The Author

Related posts